Reading Time: < 1 minute

மிசிசாகா பகுதியில் வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகிச் சென்று கடை ஒன்றின் மீது மோதிய சம்பவத்தில் படுகாயமடைந்த 46 வயது பாதசாரி ஒருவர் உயிராபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tamil Business Directory

Queen Victory Park Avenue மற்றும் Lorne Park வீதிப் பகுதியில் நேற்று முற்பகல் 11:25 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த இந்த விபத்தின் போது ஒருவர் படுகாயமடைந்ததாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும், வாகனம் கடையின் மீது மோதிய வேளையில் அவர் கடைக்குள் இருந்தாரா அல்லது கடைக்கு வெளியே நின்றிருந்தாரா என்ற விபரங்கள் எவையும் உடனடியாக வெளியிடப்படவில்லை.

இதேவேளை மோதலுக்கு உள்ளான குறித்த அந்த வாகனத்தில் இருந்த இரண்டு நபர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பீல் பிராந்திய காவல்துறையின் பாரிய விபத்து குறித்த சிறப்பு விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விபரம் அறிந்தோர் தம்மை (905) 453-2121, ext. 3710 என்ற இலக்கத்தில் தொடர்பு கொள்ளுமாறு விசாரணை அதிகாரிகள் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.