Reading Time: < 1 minute
Tamil Business Directory
கடந்த வார இறுதியில் கடந்த வார இறுதியில் குற்றச்சாட்டின் பேரில், 55 வாகன சாரதிகளுக்கு அபராதம் விதித்ததாக ஒட்டாவா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதிக ஓசையெழுப்பியமை அல்லது முறையற்ற சாதனங்களுக்காக குறித்த அபராதச் சீட்டுகள் வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேகமான மற்றும் சாகசம் காண்பித்தலுக்கு எதிரான அமுலாக்கத்துடன் அதிகப்படியான வாகன சத்தத்திற்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும் என்று பொலிஸார் கூறியுள்ளனர்.
சில கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களால் ஏற்படும் சத்தம் குறித்து குடிமக்களின் புகார்களை தொடர்ந்து ‘நொய்ஸ்மேக்கர்’ என்று அழைக்கும் நடவடிக்கையின் பகுதியாக குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.




