Reading Time: < 1 minute
Tamil Business Directory
வன்கூவரில் மோட்டார் சைக்கிளொன்று கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில், ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார், தெரிவித்துள்ளனர்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கிரான்வில் வீதிக்கு அருகிலுள்ள நெல்சன் வீதியில் கிழக்கு நோக்கி சென்று கொண்டிருந்தபோதே, இந்த விபத்து சம்பவித்துள்ளது.
வேறு எந்த வாகனங்களும் இந்த விபத்தில், தொடர்பு படவில்லை என தெரிவித்துள்ள பொலிஸார் அதிவேகமாகவே பயணித்ததே, இவ்விபத்துக்கு காரணம் என உறுதிப்படுத்தியுள்ளனர்.
சம்பவ இடத்திலிருந்து படுகாயங்களுடன் குறித்த நபர் மீட்கப்பட்ட போதும், அவர் மருத்துவமனையில் கொண்டுச் செல்லப்பட்ட போது, உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ் விபத்தானது, நடப்பாண்டில் வன்கூவரில் இடம்பெற்ற பனிரெண்டாவது மோட்டார் சைக்கிள் விபத்து என்பது குறிப்பிடத்தக்கது.




