கனடாவின் Sudbury பகுதியைச் சேர்ந்த தம்பதியினர், வங்கி மோசடியில் சிக்கி 90,000 டொலருக்கும் அதிகமான பணத்தை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டிலின் கில்பர்ட்-லெடக் மற்றும் அவரது மனைவி (Dilyn Gilbert-Leduc) நடத்தி வந்த தனிப்பட்ட மற்றும் வணிக வங்கிக் கணக்குகளில் இருந்த முழுப் பணமும் கடந்த மார்ச் 31ஆம் தேதி மோசடியாளர்களால் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோசடியாளர்கள் Scotiabank வங்கியின் உத்தியோகபூர்வ வாடிக்கையாளர் சேவை இலக்கத்தைப் போல காட்டும் “Caller ID Spoofing” முறையை பயன்படுத்தி தம்பதியினரைத் தொடர்புகொண்டுள்ளனர்.
வங்கியிலிருந்து அழைப்பு வந்ததாக நம்பிய அவர்கள், தேவையான பாதுகாப்பு தகவல்களை பகிர்ந்த பின்னர் கணக்குகளில் இருந்த பணம் முழுவதும் காணாமல் போயுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக வங்கி தரப்பில் நேரடி கருத்து தெரிவிக்கப்படவில்லை. ஆனால், வங்கி அதிகாரிகள் ஒருபோதும் PIN இலக்கம் அல்லது கடவுச்சொல் போன்ற இரகசிய தகவல்களை தொலைபேசியில் கேட்கமாட்டார்கள் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், தொலைபேசி திரையில் வங்கியின் உண்மையான இலக்கம் தோன்றினாலும், அதனை முழுமையாக நம்பி தகவல்களை வழங்க வேண்டாம் என Canadian Anti-Fraud Centre அறிவுறுத்தியுள்ளது.
வங்கியிடமிருந்து போதிய ஆதரவு கிடைக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ள இந்தத் தம்பதியினர், நண்பர்கள் மற்றும் உறவினர்களின் உதவியுடன் தற்போது தமது வாழ்வாதாரத்தையும் வணிகத்தையும் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





Comments are closed, but trackbacks and pingbacks are open.