Reading Time: < 1 minute

கனடாவின் றொரன்டோவில் பொலிஸார் மதுபானம் களவாடியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Tamil Business Directory

கடந்த மாதம் கைப்பற்றப்பட்ட மதுபான வகைகளை இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் களவாடியுள்ளனர்.

றொரன்டோவின் 51ம் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவருக்கு எதிராக இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

களவாடப்பட்ட இரண்டு போத்தல் மதுபான வகைகளை கைப்பற்றிய போலிஸார், அதனை களவாடிய சந்தேக நபரையும் கைது செய்திருந்தனர்.

55 வயதான கொன்ஸ்டபிள் பிரயன் ஜேம்ஸ், 27 கொன்ஸ்டபிள் வயதான தோமஸ் விக்டர் என்ற பொலிஸ் உத்தியோகத்தர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுபானம் களவாடிய பொலிஸாரின் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது.