Reading Time: < 1 minute

ரொறன்ரோவில் வீட்டு விற்பனை 34 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக நகரின் ரியல் எஸ்டேட் சபை தெரிவித்துள்ளது.

Tamil Business Directory

கடந்த 2021ம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது நகரின் வீடு விற்பனை சுமார் 34 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.

எனினும், கடந்த ஜுலை மாதம் வீட்டு விற்பனையை விடவும் ஓகஸ்ட் மாத வீட்டு விற்பனை 15 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் 5627 வீடுகள் விற்பனை செய்பய்பட்டுள்ளதாகவும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8549 வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

வட்டிவீதம் மற்றும் அடகு வட்டி வீதம் என்பன அதிகரிக்கப்பட்டுள்ளதனால் வீட்டு விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.