Reading Time: < 1 minute
Tamil Business Directory
கனடாவின் ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் வீடு வாடகைக்கு அமர்த்த காத்திருப்பவர்களுக்கு ஓர் அதிர்ச்சியான தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கனடாவின் வாடகைத் தொகை மிகவும் அதிகமான பகுதியாக ரொறன்ரோ பெரும்பாக பகுதி உருமாறும் சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தற்பொழுது கனடாவில் மிகவும் வாடகைத் தொகை அதிகமான பகுதியாக வான்கூவர் கருதப்படுகின்றது.
இந்த ஆண்டின் இறுதியளவில் ரொறன்ரோ பெரும்பாக பகுதி மிகவும் வாடகைத் தொகை அதிகமான பகுதியாக மாற்றமடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரொறன்ரோ பெரும்பாக பகுதியின் வாடகைத் தொகை இந்த ஆண்டில் 10 வீத அதிகரிப்பினை பதிவு செய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
கனடிய வீட்டு மனை சந்தையில் அதிகளவு வாடகைத் தொகையுடைய பிராந்தியமாக ரொறன்ரோ பெரும்பாக பகுதி பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




