Reading Time: < 1 minute

கனடாவின் ரொறன்ரோவில் பாரிய அளவில் வாகன மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Tamil Business Directory

இந்த சந்தேக நபருக்கு எதிராக 121 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

போலியான முறையில் வாகன விற்பனையில் ஈடுபட்ட நபர் ஒருவரையே இவ்வாறு கைது செய்து வழக்கு தொடர்வதாக ஒன்றாறியோ மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

43 வயதான விக்கல் லிஜார்டே என்ற நபர் மீது இவ்வாறு வழக்குத் தொடரப்பட உள்ளது.

போலி ஆவணங்களை பயன்படுத்தி வாகனங்களை விற்பனை செய்தமை, வாகன இலக்கங்களை மாற்றியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் குறித்த நபர் மீது சுமத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.