Reading Time: < 1 minute

கனடாவின் ரொறன்ரோவில் பொது இடம் ஒன்றில் அநாகரீகமாக நடந்து கொண்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Tamil Business Directory

குறித்த நபர் அநாகரீகமாக நடந்து கொண்டார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

35 வயதான நபரே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.

ஹை பார்க் பகுதியில் அமைந்துள்ள பொது நீச்சல் குளத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தபோது இந்த நபர் அநாகரிகமாக நடந்து கொண்டார் என அங்கிருந்த பொதுமக்கள் குற்றம் சுமத்தி உள்ளனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து குறித்த நபரை பொலிஸார் கைது செய்து அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.