Reading Time: < 1 minute
Tamil Business Directory
ரொறன்ரோவில் இடம்பெற்று வரும் திருட்டு சம்பவங்கள் தொடர்பில் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மக்களை திசை திருப்பி திட்டமிட்ட அடிப்படையில் களவாடப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான இரண்டு திருட்டுச் சம்பவங்கள் சிசிடிவி காணொளி மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
உதவிகள் செய்வது போன்று அருகில் வந்து கவனத்தை திசை திருப்பி பணப்பைகள் போன்றன திருடப்படுவதாக பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.
உதவுவதற்கு சென்றவர்கள் இவ்வாறு திருட்டுச் சம்பவங்களில் பாதிக்க நேரிட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.




