Reading Time: < 1 minute

றொரான்டோவில் சாரதிகள் வருடமொன்றுக்கு சுமார் 199 மணித்தியாலங்கள் வீதியில் காத்திருக்க நேரிடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Tamil Business Directory

போக்குவரத்து நெரிசல்களினால் இவ்வாறு காத்திருக்க நேரிடுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

புதிய கருத்துக் கணிப்பு ஒன்றின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

பிரிட்டிஷ் கார் ரென்டல் என்னும் நிறுவனத்தினால் இந்த கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உலகின் மிக மோசமான போக்குவரத்து நெரிசல் நிலை காணப்படும் உலக நகரங்களின் வரிசையில் றொரன்டோ 13ம் இடத்தை வகிக்கின்றது.

அதிகபட்ச போக்குவரத்து நெரிசல் நிலை காணப்படும் நேரங்களில் மணிக்கு 25 கிலோமீற்றர் என்ற வேகத்தில் வாகனங்கள் பயணம் செய்யும் என தெரிவிக்கப்படுகின்றது.