Reading Time: < 1 minute

கனடாவின் ரொறன்ரோவில் குரோத உணர்வு சம்பவங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

Tamil Business Directory

காசா போர் தொடங்கியது முதல் இதுவரையில் ரொறன்ரோவில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குரோத உணர்வு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

ஓராண்டு காலப் பகுதியில் குரோத உணர்வு சம்பவங்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

கடந்த 2022ம் ஆண்டில் இந்தக் காலப் பகுதியில் 48 சம்பவங்களும் பதிவாகியுள்ளதுடன், இந்த ஆண்டு இதே காலப் பகுதியில் 98 சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

ரொறன்ரோவில் இஸ்லாமியர்களுக்கும், யூதர்களுக்கும் எதிரான குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.