Reading Time: < 1 minute
Tamil Business Directory
கத்தி குத்துச் சம்பவத்துடன் தொடர்புடைய பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நோர்த் யோர்க் பகுதியில் இந்த கத்தி குத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஜேன் மற்றும் வில்சன் வீதிகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள குடியிருப்புத் தொகுதியொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தாக்குதலில் நபர் ஒருவர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண் மீது எவ்வாறான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.




