Reading Time: < 1 minute
Tamil Business Directory
பனிப்பொழிவினால் நதிகளில் பனி படர்ந்துள்ள நிலையில் மக்கள் அதன்மேல் நடமாடி வருகின்றனர்.
இவ்வாறு நடமாடிய மூவர் திடீரென பனிப்பாறை உடைந்து நதியில் மூழ்கியுள்ளனர்.
இவ்வாறு நீரில் மூழ்கிய மூவரில் ஒருவர் உயிர் பிழைத்துள்ளார்.
ஏனைய இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தக் காலப் பகுதியில் பனிக்கட்டிகளின்மேல் நடப்பது ஆபத்தானது என பொலிஸார் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒன்றாரியோவின் கார்ல்ஸ்டன் நதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
ஓரளவு வெப்பநிலை நிலவும் காலப் பகுதியில் பனிபடர்ந்த பகுதிகளில் நடமாடுவதனை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.




