Reading Time: < 1 minute

கொரோனா அச்சம் காரணமாக கனடாவின் ரொறன்ரோவில் இருந்து Bermudaவுக்கு நேரடியாக செல்லும் ஏர் கனடா விமான சேவைகள் நிறுத்தப்படப்படவுள்ளது.

Tamil Business Directory

ஜனவரி 9ஆம் திகதி முதல் ரொறன்ரோவில் இருந்து Bermudaவுக்கு பயணிகள் விமானமானது செல்லாது என ஏர் கனடா தெரிவித்துள்ளது.

தற்போதைய கொரோனா தொற்று சூழல் காரணமாக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஏர் கனடா செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

தொற்றுநோய்களின் வீரியம் மற்றும் அது தொடர்பாக அரசாங்கம் விதித்துள்ள கட்டுபாடுகள், தனிமைப்படுத்தல்கள் ஆகியவைகளை கவனித்தவாறு ஏர் கனடா தனது பணியை தொடரும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் இதன் காரணமாக பாதிக்கப்படும் வாடிக்கையாளர்களை ஏர் கனடா தொடர்பு கொண்டு, பணத்தைத் திரும்ப பெற வழிவகை செய்வது, மாற்று வழிகள் குறித்து சொல்வது உள்ளிட்ட உதவிகளை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.