Reading Time: < 1 minute

கனடாவின் ரொறன்ரோவில் பாலியல் குற்றச்செயலில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Tamil Business Directory

குடியிருப்பு தொகுதி ஒன்றில் வசித்து வந்த குறித்த நபர் அருகாமையில் சென்ற பெண்கள் மற்றும் பதின்ம வயதுடைய சிறுமியர் போன்றவருக்கு பாலியல் ரீதியான தகாத சைகைகளை செய்து காண்பித்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ரொறன்ரோ போலீசார் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ப்ளோர் மற்றும் பத்ரஸ்ட் வீதிகளுக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.

குறித்த நபர் பெண்கள் மற்றும் சிறுமியர் வீதியில் நடந்து செல்லும்போது அவர்களை வழிமறித்து அநாகரீகமான சைககளை செய்து காண்பித்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக விசாரணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 43 வயதான அடல் நஜிக்கோல் என்ற டொன்டோவை சேர்ந்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பாலியல் ரீதியான துன்புறுத்தல் குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் மேலும் பலரை இவ்வாறு துன்புறுத்தி இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடு செய்ய முடியும் அல்லது அது குறித்த தகவல்களை வழங்க முடியும் என ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.