Reading Time: < 1 minute
Tamil Business Directory
கனடாவின் மேற்கு பகுதியில் சீனிக்கு தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ளது.
எனவே, பெரும்பாலான மளிகைக் கடைகளில் நுகர்வோருக்கு விற்பனை செய்யப்படும் சீனியின் அளவு வரையறுக்கப்பட்டுள்ளது.
மேற்கு கனடாவின் ரொஜர்ஸ் என்னும் பிரதான சீனி உற்பத்தி நிறுவனத்தில் பணியாளர்கள் தொழிற்சங்கப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இதனால் சீனி உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால், சீனி விநியோகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனிக்கான தட்டுப்பாடு பேக்கரி மற்றும் இனிப்பு பண்டங்கள் உற்பத்தியில் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது எதிர்வரும் சில வாரங்களுக்கு சீனித் தட்டுப்பாடு நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.




