Reading Time: < 1 minute

கடந்த அக்டோபரில் தனது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக மெக்சிகோவிலுள்ள ரிசார்ட் ஒன்றிற்கு தன் நண்பர்களுடன் சென்றிருந்த இந்தியப் பெண்ணான அஞ்சலி ரயட் சுட்டுக்கொல்லப்பட்டார்.

Tamil Business Directory

உண்மையில், போதைக் கும்பல்கள் இரண்டிற்கு நடுவே நடந்த துப்பாக்கிச் சண்டையின்போது, குண்டு பாய்ந்து அஞ்சலியும் ஜேர்மன் பெண் ஒருவரும் கொல்லப்பட்டனர்.

தற்போது, இந்த சம்பவம் நடந்த இடத்துக்கு சற்று தொலைவில் அமைந்துள்ள ரிசார்ட் ஒன்றில் கனேடியர்கள் இருவர், ஒரு ஆணும் ஒரு பெண்ணும், கத்திக்குத்துக் காயங்களுடன் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

விசாரணயில், அந்த ஆண் சர்வதேச பொலிசாரால் தேடப்பட்டு வந்தவர் என தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் நடந்த Playa del Carmen என்னும் நகரத்தில், இதேபோல பல வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. சமீபத்தில், ஜனவரி மாதம், சர்வதேச போதைக் கடத்தல் மற்றும் ஆயுதக் கடத்தல் கும்பல்களிடம் சிக்கிய கனேடியர்கள் இருவர் உள்ளூர் ரிசார்ட் ஒன்றில் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.