Reading Time: < 1 minute

ஒன்றாரியோ- தேம்ஸ்ஃபோர்ட் வடகிழக்கில் இடம்பெற்ற மூன்று வாகனங்கள் தொடர்புபட்ட வாகன விபத்தில் பெண்னொருவர் உயிரிழந்துள்ளார்.

Tamil Business Directory

ஆக்ஸ்போர்ட் கவுண்டியைச் சேர்ந்த பெண்னொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக ஒன்ராறியோ மாகாண பொலிஸ் மற்றும் அவசர சேவைகள் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த விபத்தில் ஒரு மினி வான், பிக்-அப் டிரக் மற்றும் ஒரு டிராக்டர்-டிரெய்லர் ஆகியவை அடங்கும்.

மினி வானின் சாரதியான 53 வயதான பெண்னொருவரே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது, உயிரிழந்தார்.

பிக்கப் டிரக்கின் வாகன சாரதி ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், டிரக்டர்- டிரெய்லரின் சாரதி சிறிய காயங்களுக்கு சம்பவ இடத்தில் சிகிச்சை பெற்று கொண்டதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இவ் விபத்துக்கான காரணம் இன்னும் வெளியாகாத நிலையில், இதுகுறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.