Reading Time: < 1 minute

மிசிசாகாவில் வாகனத்தினால் மோதுண்ட ஆண் பாதசாரி ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tamil Business Directory

எக்ளிங்டன் அவனியூவுக்கு வடக்கே, Scollard Court Avenue மற்றும் Heatherleigh Avenue பகுதியில் நேற்று இரவு 8:20 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விபத்துக்குள்ளான ஆண் பாரதூரமான காயங்களுடன் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதனை பீல் பிராந்திய அவசர மருத்துவப் பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

விபத்துடன் தொடர்புடைய வாகனத்தின் சாரதி சம்பவ இடத்திலேயே தரித்திருந்ததாகவும், குறித்த அந்தப் பகுதி ஊடான போக்குவரத்துகள் தடை செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.