Reading Time: < 1 minute

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் கடந்த மார்ச் மாதம் பிற்பகுதிக்கு பிறகு, நாளொன்றுக்கான குறைந்த வைரஸ் தொற்று உயிரிழப்பு பதிவாகியுள்ளது.

Tamil Business Directory

கடந்த 24 மணித்தியாலத்தில் 172பேர் வைரஸ் தொற்றினால் பாதிப்படைந்துள்ளதோடு, 4பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்படி, மார்ச் மாதம் 26ஆம் திகதி (3பேர்) உயிரிழந்ததற்கு பிறகு இதுவரை பதிவான குறைந்த பட்ச உயிரிழப்பு எண்ணிக்கை இதுவாகும்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 19ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை வைரஸ் தொற்றினால் மொத்தமாக 1 இலட்சத்து 2,794பேர் பாதிப்படைந்ததோடு, 8,508பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர்.

மேலும், 28,560பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 65,726பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுதவிர, 2,085பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.