Reading Time: < 1 minute

கனடாவில் 56 வயதான ஒரு பெண்மணி, திங்கட்கிழமை காலை மார்க்கம் பகுதியில் வாகனம் மோதியதில் கடுமையாக காயமடைந்து பின்னர் உயிரிழந்துள்ளார்.

Tamil Business Directory

யார்க் பிராந்திய பொலிஸார் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.

விபத்து Markham Road மற்றும் Steeles Avenue East சந்திப்புக்கு அருகில் காலை 8 மணியளவில் ஏற்பட்டது.

பாதசாரியாக நடந்துவந்த அந்த பெண்மணி, வாகனம் மோதி மரணபாயமான காயங்களுடன் உடனடியாக ஒரு அவசர சிகிச்சை மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டபோதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தையடுத்து, சம்பவ இடத்திலுள்ள சாலைகள் முழு நாளும் மூடப்படும் என போலீசார் அறிவித்துள்ளனர். விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.