Reading Time: < 1 minute

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்நிலையைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள கனடியர்களை வெளியேற்ற கனடா அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அனித ஆனந்த் தெரிவித்துள்ளார்.

Tamil Business Directory

அதன்படி, டுபாயிலிருந்து இஸ்தான்புல் நகரத்திற்குப் பயணிக்கும் சார்ட்டர் விமானம் ஒன்று சனிக்கிழமை புறப்பட உள்ளதாகவும், அதில் சுமார் 180 கனடியர்கள் பயணிக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த விமான சேவை செலவுகளை மீட்டெடுக்கும் இயக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் எயார் அரேபியா நிறுவனத்தின் சில விமானங்களில் முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகள் மூலம், டுபாயிலிருந்து இஸ்தான்புலுக்கு செல்லும் ஒவ்வொரு விமானத்திலும் சுமார் 50 இருக்கைகள் கனடியர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதேபோல் எமிரேட்ஸ் விமான சேவையின் டுபாயிலிருந்து Toronto நோக்கி புறப்படும் விமானத்தில் 51 இருக்கைகள் கனடியர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் பெய்ரூட் நகரத்திலிருந்து இஸ்தான்புல் நோக்கி வரும் நாட்களில் இயக்கப்படவுள்ள நான்கு விமானங்களில் மொத்தமாக 200 இருக்கைகள் கனடியர்களுக்காக முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் கட்டாரிலிருந்து சவூதி அரேபியா நோக்கி பயணிக்க 180 இருக்கைகள் கொண்ட நான்கு சார்ட்டர் பேருந்துகளும் சனிக்கிழமை முதல் இயக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய கிழக்கு பகுதியில் வசிக்கும் 108,000 க்கும் மேற்பட்ட கனடியர்கள் வெளிவிவகார அமைச்சில் பதிவு செய்துள்ளதாகவும், அதில் சுமார் 3,500 பேர் அந்தப் பகுதியிலிருந்து வெளியேற உதவி கோரியுள்ளதாகவும் அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.