Reading Time: < 1 minute

அமெரிக்கா – இஸ்ரேல் இணைந்த தாக்குதல்கள் ஈரானை குறிவைத்ததைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் உருவாகியுள்ள தீவிரமான போர் பதற்றம் காரணமாக பல சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Tamil Business Directory

இதனால் அந்த பிராந்தியத்தில் உள்ள கனடியர்கள் உட்பட பல வெளிநாட்டு பயணிகள் தாய்நாட்டிற்கு திரும்ப முடியாமல் சிக்கியுள்ளனர்.

இந்த வார இறுதியில் ஏற்பட்ட திடீர் பதற்ற உயர்வில், ஈரானின் உயரிய தலைவர் அல் கமெய்னி உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம், தெஹ்ரானில் வெடிப்புகள் மற்றும் அதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் வளைகுடா அரபு நாடுகளை நோக்கி ஏவுகணை தாக்குதல்கள் இடம்பெற்றமை நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.

இந்த பாதுகாப்பு சூழ்நிலை காரணமாக சில விமான நிறுவனங்கள் துபாய், அபுதாபி மற்றும் தோஹா உள்ளிட்ட முக்கிய மத்திய கிழக்கு நகரங்களுக்கு செல்லும் சேவைகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன.

இதன் விளைவாக, ஈரானில் உள்ள கனடியர்கள் தாய்நாட்டிற்கு திரும்ப முடியாமல் உள்ளனர் என்பதுடன் அருகிலுள்ள நாடுகளில் இருந்து கனடாவிற்கு செல்ல முயன்றவர்களின் பயணம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

விமான ரத்துகளால் பலர் இடைநிலையங்களில் சிக்கியுள்ளனர், பாதுகாப்பு குறித்து கவலைகள் அதிகரித்துள்ளன ஈரானில் இருந்து திரும்ப முயலும் அல்லது மத்திய கிழக்கிலிருந்து கனடாவிற்கு செல்ல முடியாமல் சிக்கியுள்ளவர்கள் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.