Reading Time: < 1 minute

ரொறன்ரோவில் ஒரு பெண்ணை வலுக்கட்டாயமாக அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ள நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

Tamil Business Directory

சுமார் ஒன்றரை ஆண்டு காலம் குறித்த பெண் அந்த நபரால் சித்திரவதை அனுபவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கைதான 29 வயது துருபோ ஹசன் என்பவர் மீது 40 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் இந்த வழக்குகள் நிரூபிக்கப்பட வேண்டும் என பொலிஸ் தரப்பு குறிப்பிட்டுள்ளது. மேலும், புதன்கிழமை ரொறன்ரோ கிழக்கு நீதிமன்றத்தில் ஹசன் ஆஜர்படுத்தப்பட்டார்.

முதற்கட்ட விசாரணைக்கு பின்னர், தொடர்புடைய நபரால் பாதிக்கப்பட்ட நபர்கள் எவரேனும் இந்த தகவல் அறியவந்தால், கண்டிப்பாக விசாரணை அதிகாரிகளை நாடவும் அறிவுறுத்தியுள்ளனர்.

மட்டுமின்றி விசாரணைக்கு உதவும் வகையில் தகவல் தெரியவரும் மக்கள் தங்களை அணுகவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.