Reading Time: < 1 minute
Tamil Business Directory
கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் பாரிய அளவில் மின்விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக இவ்வாறு மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 2 லட்சத்து 30 ஆயிரம் வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களையும் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பலத்த காற்று மற்றும் கடும் மழை காரணமாக இவ்வாறு மின் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
துண்டிக்கப்பட்ட மின் இணைப்புகளை மீள வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மின்விநியோகத்தை மீள வழங்குவது காலதாமதம் ஏற்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
பொதுமக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து செயற்பாடுகள், முன்னெடுக்கப்படும் என பிரிட்டிஷ் கொலம்பியா மின் விநியோக நிறுவனம் தெரிவித்துள்ளது.




