Reading Time: < 1 minute
Tamil Business Directory
பிராம்ப்டன் நகரில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த நபர் தீவிர காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக பீல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று காலை 9:50 மணியளவில் மால்டா அவன்யூ Malta Avenue மற்றும் றே லொவ்சன் Ray Lawson Boulevard பகுதியில் இடம்பெற்றுள்ளது.
அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரின் அழைப்பை தொடர்ந்து பொலிஸார் அந்த இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அங்கு ஏற்பட்ட முரண்பாட்டில், ஒரு வயது முதிர்ந்த ஆண் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
சம்பவத்தின் முழுமையான பின்னணி குறித்து உடனடி தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை. சம்பவத்தில் எந்த பொலிஸாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், நிலைமை தற்போது கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




