Reading Time: < 1 minute

நேற்று இரவு பிரம்டனில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் நால்வரைத் தேடி வருவதாக பீல் பிராந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tamil Business Directory

Glidden வீதி மற்றும் Rutherford வீதிப் பகுதியில் நேற்று இரவு 11:20 அளவில் இந்த துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளது.

தகவல் அறிந்து தாம் சம்பவ இடத்தினைச் சென்றடைந்த போது அங்கே ஆண் ஒருவர் காயங்களுடன் காணப்பட்டதாகவும், உயிராபத்தற்ற நிலையில் காணப்பட்ட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவருக்கு ஏற்பட்டிருந்த காயம் துப்பாக்கிச் சூட்டினால் ஏற்பட்டதல்ல என்பதனை பின்னர் அறிந்து கொண்டதாகவும் தகவல் வெளியிட்டுள்ள காவல்துறையினர், தாம் சம்பவ இடத்தினைச் சென்றடைவதற்கு முன்னர் சந்தேக நபர்கள் அங்கிருந்து தப்பித்துச் சென்றுவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் 20இலிருந்து 30 வயதுக்கு இடைப்பட்ட கறுப்பு இன ஆண்கள் என்றும், கருமை நிற ஆடைகளை அவர்கள் அணிந்திருந்ததாகவும், வெள்ளை நிற வாகனம் ஒன்றில் அவர்கள் தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இந்தச் சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்தோர், தம்மை அல்லது குற்றத் தடுப்புப் பிரிவினரைத் தொடர்புகொள்ளுமாறு காவல்துறையினர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்து்ளளனர்.