Reading Time: < 1 minute
Tamil Business Directory
கனடாவின் பிரம்டனில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
இந்த விபத்தில் மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். இரண்டு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பீல் பிராந்திய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வேனில் பயணம் செய்த நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார். வாகனங்கள் பந்தயத்தில் ஈடுபட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.




