Reading Time: < 1 minute
Tamil Business Directory
கனடாவில் ரயிலில் மோதுண்ட நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
Go பொதுப் போக்குவரத்துச் சேவைக்கு சொந்தமான ரயில் ஒன்றில் நபர் ஒருவர் மோதுண்டுள்ளார்.
லேன்டிங் மற்றும் யோங் வீதிகளுக்கு அருகாமையில் பிரட்போர்ட்டில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ரயில் பாதையில் அல்லது மிக அருகாமையில் இருந்த நபர் ஒருவரே இவ்வாறு ரயிலில் மோதுண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்து காரணமாக குறித்த பகுதியின் போக்குவரத்து ஸ்தம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் யார் என்பது பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
இந்த விபத்து குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.




