Reading Time: < 1 minute
Tamil Business Directory
பெண்ணொருவருக்கு தொடர்ந்து இரண்டு நாட்களாக பாலியல் தொல்லை கொடுத்த சந்தேக நபரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தற்போது சந்தேகநபர் தொடர்பான சி.சி.ரி.வி காணொளி பதிவொன்றினை வெளியிட்டுள்ள பொலிஸார், இவர் குறித்த தகவல் தெரிந்தவர்கள் தம்மை தொடர்புக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
குறித்த நபர், யோங் மற்றும் ஜெரார்ட் பகுதியில் 16 வயது சிறுமியொருவரை, பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதே பகுதியில், அடுத்தடுத்த நாட்களில் தொடர்ச்சியாக குறித்த பெண்ணுக்கு, சந்தேக நபர் பாலியல் தொல்லை கொடுத்ததாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, தற்போது பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




