டொராண்டோ பொலிஸ் திணைக்களத்தைச் சேர்ந்த உத்தியோகத்தர் ஒருவர் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் வல்லுறவு மற்றும் தாக்குதல் குற்றச்சாட்டுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
பீல் பிராந்திய பொலிஸாரின் (Peel Regional Police) ‘விசேட பாதிக்கப்பட்டோர் பிரிவு’ (Special Victims Unit) மேற்கொண்ட தீவிர விசாரணையைத் தொடர்ந்து, டொராண்டோ பொலிஸ் உத்தியோகத்தரான ஃபர்ஹான் அலி (Farhan Ali) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
39 வயதான இவர் மார்க்கம் (Markham) பகுதியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்டுள்ள உத்தியோகத்தர் அலி மீது பாலியல் அத்துமீறல்/வல்லுறவு உள்ளிட்ட 7 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்த விவகாரம் குறித்து டொராண்டோ பொலிஸ் தரப்பு விளக்கம் அளித்துள்ளது. குறித்த உத்தியோகத்தர் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நேரத்தில் பணியில் இருக்கவில்லை (Off-duty) எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், ‘சமூக பாதுகாப்பு மற்றும் பொலிஸ் சட்டத்தின்’ (Community Safety and Policing Act) கீழ், ஃபர்ஹான் அலி தற்போது சம்பளத்துடனான பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
“இந்த விவகாரம் தற்போது நீதிமன்றத்தின் முன் இருப்பதால், விசாரணையின் மேலதிக விபரங்களை இப்போதைக்கு வெளியிட முடியாது” என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.