Reading Time: < 1 minute

கனடாவில் தகாத முறையில் நடந்து கொண்ட கனடிய பிரஜை ஒருவர் நாடு கடத்தப்பட்டுள்ளார்.

Tamil Business Directory

கனடாவின் பீட்டர் ப்ரோ பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளார்.

சிறுவர் பாலியல் குற்றச்செயல்கள் பலவற்றில் ஈடுபட்டதாக இந்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பொலிசார் விசாரணை
இந்த நபருக்கு எதிராக கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் மூன்று பிரிவினை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தன.

சந்தேக நபர் தலைமறைவாக இருந்த நிலையில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர். இதன்போது குறித்த நபர் மேற்கு வெர்ஜீனியா பகுதியில் புதுங்கியிருந்தார்.

அமெரிக்கா போலீசார் குறித்த நபரை கைது செய்து நாடு கடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

நாடு கடத்தப்பட்ட கனடியர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவருக்கு எதிரான வழக்கு விசாரணைகள் கனடிய நீதிமன்றில் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.