Reading Time: < 1 minute

பாரிய அளவில் பாலியல் குற்ற செயல்களுடன் தொடர்புடைய நபர் ஒருவரை கனடிய போலீசார் தேடி வருகின்றனர்.

Tamil Business Directory

கடந்த 2011 ஆம் ஆண்டு மூன்று வயது சிறுவனை கடத்தி பாலியல் குற்றச்செயலில் ஈடுபட்டதாக குறித்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

58 வயதான 2 என்ற நபர் இவ்வாறு குற்ற செயலில் ஈடுபட்டு தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபருக்கு எதிராக நாடு தழுவிய அடிப்படையில் பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சிறுவர் பாலியல் குற்றச்செயல்கள், பாலியல் குற்ற செயல்கள், தாக்குதல்கள் மற்றும் சொத்து மோசடி என பல்வேறு குற்ற செயல்களுடன் இந்த நபருக்கு தொடர்பு உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபரின் புகைப்படம் ஒன்றும் பொலிஸாரினால் வெளியிடப்பட்டுள்ளது. பாலியல் குற்றச் செயல் தொடர்பில் பிரிட்டிஷ் கொலம்பிய முதல்வர் டேவிட் எபியும் இந்த சம்பவம் தொடர்பில் கடுமையான அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.