Reading Time: < 1 minute

பாரிய குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபருக்கு கனடா தழுவிய பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Tamil Business Directory

28 வயதான ஜார்ஜ் செப்பு என்ற நபரே இவ்வாறு தேடப்பட்டு வருகின்றார். இந்த நபர் ரொறன்ரோ பெரும்பாக பகுதிக்கு அடிக்கடி செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.

நீதிமன்ற உத்தரவுகளை மீறி செயல்பட்டதாக குறித்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கை பூர்வீகமாக கொண்ட இந்த நபர் மாநிறமானவர் எனவும் 5.8 அங்குலம் உயரமுடையவர் எனவும் 121 பவுண்ட்ஸ் எடையுடையவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இவர் தாக்குதல் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய குற்ற குற்றச்சாட்டில் மூன்றாண்டு சிறை தண்டனை அனுபவித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சந்தேக நபர் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் தெரிந்தால் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நபருக்கு எதிராக நாடு தழுவிய அடிப்படையில் பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.