Reading Time: < 1 minute

கனடாவின் விமான சேவை நிறுவனங்களில் ஒன்றான எயார் கனடா விமான சேவை பயணிகளுக்கு பியர் மற்றும் வைன் வழங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Tamil Business Directory

கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பயணங்களின் போது இந்த சலுகை வழங்கப்பட உள்ளது.

எகனொமி ஆசனங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு இந்த சலுகை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு பூர்த்தியாகும் வரையில் இவ்வாறு மதுபான வகைகள் மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் கரீபியன் மற்றும் மெக்ஸிக்கோ நாடுகளுக்கான பயணங்களின் போது இந்த சலுகை வழங்கப்படாது என எயார் கனடா விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.