Reading Time: < 1 minute

இன்று காலை நெடுஞ்சாலை 406இல், St. Catharines பகுதியில் வாகனம் ஒன்று தவறான வழித்தடத்தில் பயணித்ததில் ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

Tamil Business Directory

இன்று அதிகாலை ஒரு மணியளவில் நெடுஞ்சாலையின் Glendale Avenue பகுதியில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

வடக்கு நோக்கி பயணிக்க வேண்டிய வழித்தடத்தில் வாகனம் ஒன்று தெற்கு நோக்கிச் சென்றதாகவும், எதிரே வந்த பிறிதொரு வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த கோர விபத்து சம்பவித்ததாகவும் ஒன்ராறியோ மாகாண காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தின் போது சரியான திசையில் சென்ற வேளையில் மோதுண்ட வாகனம், விபத்தினை அடுத்து தீப்பற்றி எரிந்ததாகவும், அந்த வாகனத்தில் இருந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாகவும், அவர்களில் ஒருவர் ஆண் மற்றையவர் பெண் என்றும், பிழையான திசையில் வந்து மோதிய வாகனத்தைச் செலுத்திவந்த 24 வயது ஆண் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் விபரம் வெளியிட்டுள்ளனர்.

விபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் தொடர்கின்றன.