Reading Time: < 1 minute

கனடாவின், நார்த் யார்க்கில் உள்ள ஓர் குடியிருப்பில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஏற்பட்ட தீவிபத்தில் 60 வயதுடைய ஒரு நபர் உயிரிழந்துள்ளார்.

Tamil Business Directory

இந்த சம்பவம் மதியம் 4 மணியளவில் டான் மில்ஸ் சாலை மற்றும் ரோஷெஃபார்ட் டிரைவ் சந்திப்பில் உள்ள வீட்டில் நிகழ்ந்தது என டொராண்டோ காவல் துறை தங்கள் “X” (முன்பு ட்விட்டர்) கணக்கில் தெரிவித்துள்ளது.

தீயணைப்பு வீரர்கள் முதன்மை தேடலின் போது அந்த நபரை கண்டுபிடித்து உடனே வெளியே கொண்டுவந்தனர்.

ஆனால், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்து விட்டதாக டொராண்டோ தீயணைப்பு சேவையின் தலைவர் ஜிம் ஜெசப் தெரிவித்துள்ளார்.

“இன்று தந்தையர் தினமான இந்நாளில், டொராண்டோ தீயணைப்பு, காவல் மற்றும் மருத்துவ உதவி சேவைகளின் சார்பாக, பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

இது அந்தப் பகுதியில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும் சோகமான சூழ்நிலையாகும்” என மேலும் குறிப்பிட்டுள்ளார். தீயை கட்டுப்படுத்தியுள்ளதாகவும், அந்த வீட்டில் வேறு யாரும் வசிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

ஒரு தீயணைப்பு வீரர் சிறு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவர் ஆபத்தற்ற நிலையில் உள்ளார்.

இந்த உயிரிழப்பிற்கு காரணமான தீயின் தோற்றம், காரணம் மற்றும் சூழ்நிலைகள் குறித்து விசாரணை நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த நபர் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.