Reading Time: < 1 minute

கனடாவின் நயகராவில் பாரியளவில் போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன.

Tamil Business Directory

ரொறன்ரோவைச் சேர்ந்த நபர் ஒருவரின் வாகனமொன்றலிருந்து இவ்வாறு போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன.

நயகராவின் கிங் வீதியில் வாகனமொன்றை நிறுத்தி எழுமாறான அடிப்படையில் சோதனையிட்ட போது, வாகனத்திலிருந்து போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

வாகனத்தைச் செலுத்தி வந்த சந்தேக நபர் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் 20000 டொலர்கள் பெறுமதியான போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் ஜாமா நசீர் என்ற 35 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

போதை மாத்திரை கடத்தல்கள் போன்ற சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் பற்றிய விபரங்களை பொலிஸாருக்கு அறிவிக்குமாறு அதிகாரிகள் பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.