Reading Time: < 1 minute
Tamil Business Directory
தனியாக நடந்து செல்லும் பெண்களுக்கு கல்கரி சட்ட அமுலாக்கத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
பெண்கள் தனியாக நடந்து செல்லும் போது பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2020ஆம் ஆண்டு நவம்பர் தொடக்கத்தில் இருந்து நகர மற்றும் வட மத்திய கல்கரி ஆகிய இரு இடங்களிலும் 15 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
சந்தேக மனிதர் குறித்த விளக்கங்கள் மாறுபட்டிருந்தாலும், ஒரே ஒருவருடனேயே புகார்கள் தொடர்புடையவையா என்பதை உறுதிப்படுத்தக் பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.
தனியாக நடந்து செல்லும் பெண்களுக்கு விழிப்புணர்வை அதிகரிக்க கல்கரி பொலிஸார் இந்த அழைப்பை விடுத்துள்ளது.




