Reading Time: < 1 minute

கனடாவின் டொராண்டோ நகரில் உள்ள யார்க்வில் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Tamil Business Directory

Avenue Road மற்றும் Davenport Road சந்திப்புகளுக்கு அருகிலுள்ள பகுதியில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாக கிடைத்த தகவலின் பேரில், டொராண்டோ பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

அங்கு சென்ற பொலிஸார், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான ஆதாரங்களை கண்டறிந்ததுடன், அருகிலிருந்த ஒரு வர்த்தக நிலையம் சேதமடைந்திருந்ததையும் உறுதிப்படுத்தினர்.

இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகவில்லை. சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூடு குறிவைத்து நடத்தப்பட்டதா அல்லது சம்பவத்தின் பின்னணியில் வேறு காரணங்கள் உள்ளதா என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளைத் தொடர்ந்து வருகின்றனர். சம்பவம் தொடர்பான தகவல் உள்ளவர்கள் டொராண்டோ பொலிஸாரை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.