Reading Time: < 1 minute

டொரண்டோ நகரின் லோரன்ஸ் ஹைட் Lawrence Heights பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் சக்கர நாற்காலியில் இருந்த 31 வயது நபர் ஒருவர் உயிரிழந்தார்.

Tamil Business Directory

மேலும் ஐவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் ரெனே அவன்யூ Ranee Avenue மற்றும் வார்னா ட்ரைவ் Varna Drive அருகே, யோர்க்டேல் Yorkdale மாலுக்குச் சற்றே அருகில் உள்ள வெளி பரப்பில் இரவு 8:30 மணியளவில் இடம்பெற்றது.

பொலிஸாருக் பெருமளவு துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டதாக அழைப்பு வந்ததுடன், சம்பவ இடத்திற்கு சென்ற போது உயிருக்குப் பாதிப்பான காயங்களுடன் ஒருவர் கிடைத்ததாக தெரிவித்தனர்.

அவர் பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அவரது அடையாளம், குடும்பத்தினருக்கு அறிவித்த பிறகு வெளியிடப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக 2018ஆம் ஆண்டு நடந்த ஒரு துப்பாக்கிச் சம்பவத்தில் அந்த நபர் பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார் என நகர மன்ற உறுப்பினர் மைக் கொல்லே (Mike Colle) தெரிவித்தார்.

காயமடைந்தவர்கள் 17 முதல் 30 வயதுக்குட்பட்ட நான்கு ஆண்கள் மற்றும் ஒரு பெண் என தெரிவிக்கப்படுகின்றது.

குற்றவாளிகள் மூன்று பேர் – அனைவரும் கருப்பு நிற உடையணிந்து முகமூடி அணிந்தவர்கள் என விவரிக்கப்பட்டுள்ளனர்.