Reading Time: < 1 minute

டர்ஹாம் பிராந்தியத்தில் 1.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக, டர்ஹாம் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Tamil Business Directory

இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஒன்றாரியோ- ரிச்மண்ட் ஹில் பகுதியை சேர்ந்த 41 வயதான ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவர் மீது, கடத்தல் நோக்கத்திற்காக நான்கு உள்ளிட்ட ஒன்பது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த தேடுதல் நடவடிக்கையின் போது, 14.5 கிலோகிராம் ஃபெண்டானைல், 2.8 கிலோகிராம் கோகோயின் மற்றும் 2.5 கிலோகிராம் படிக மெத் ஆகியவை அடங்கும். இதன்மொத்த பெறுமதி 1.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.

மேலும். இதன்போது துப்பாக்கி மற்றும் 70,000 ரொக்க பணத்தையும் பொலிஸார் கைப்பற்றினர்.

இதனை, பிராந்தியத்தின் இரண்டாவது மிகப்பெரிய ஃபெண்டானைல் கைப்பற்றல் இதுவென டர்ஹாம் பிராந்திய பொலிஸார் விபரிக்கின்றனர்.