Reading Time: < 1 minute

கனடாவில் கடந்த மார்ச் மாதத்திற்கு பிறகு, கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் நாளொன்றுக்கான குறைந்த உயிரிழப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

Tamil Business Directory

கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் 300பேர் பாதிப்படைந்துள்ளதோடு, 6பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம் கடந்த மார்ச் மாதம் 29ஆம் திகதிக்கு (5பேர் உயிரிழப்பு) பிறகு குறைந்த அளவிலான உயிரிழப்பு பதிவாகியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 18ஆவது நாடாக மாறியுள்ள கனடாவில், இதுவரை வைரஸ் தொற்றினால் மொத்தமாக 1 இலட்சத்து 1,637பேர் பாதிப்படைந்ததோடு, 8,436பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர்.

மேலும், 28,867பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 64,334பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுதவிர, 2,048பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.