Reading Time: < 1 minute

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், மார்ச் மாத இறுதிக்கு பிறகு நாளொன்றுக்கான அதிகபட்ச பாதிப்பு பதிவாகியுள்ளது.

Tamil Business Directory

கடந்த 24 மணித்தியாலத்தில் 1,008பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு, 9பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த மார்ச் 25ஆம் திகதிக்கு (1012பேர்) பிறகு, கடந்த 24 மணித்தியாலத்தில் தான் நாளொன்றுக்கான அதிகபட்ச பாதிப்பு பதிவாகியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 24ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை ஒரு இலட்சத்து 28ஆயிரத்து 948பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மொத்தமாக 9ஆயிரத்து 126பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், ஐந்தாயிரத்து 595பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, ஒரு இலட்சத்து 14 ஆயிரத்து 227பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுதவிர, 50பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.