Reading Time: < 1 minute

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் கடந்த 24 மணித்தியாலத்தில், 139பேர் உயிரிழந்ததோடு, 641பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tamil Business Directory

இதற்கமைய உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7,637ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 93,726ஆக அதிகரித்துள்ளது.

மேலும், 34,350பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 51,739பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுதவிர, 1,727பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.