Reading Time: < 1 minute
Tamil Business Directory
கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஆயிரத்து 044பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு, 5பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 26ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை ஒரு இலட்சத்து 41ஆயிரத்து 911பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மொத்தமாக 9ஆயிரத்து 205பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், எட்டாயிரத்து 983பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, ஒரு இலட்சத்து 23ஆயிராயிரத்து 723பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுதவிர, 82பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.




