Reading Time: < 1 minute
Tamil Business Directory
கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொடிய கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் 686பேர் பாதிப்படைந்ததோடு, 11பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன்மூலம் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 21ஆவது நாடாக விளங்கும் கனடாவில், வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 14ஆயிரத்து 597ஆக உயர்ந்துள்ளது. மேலும், எட்டு ஆயிரத்து 901பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர்.
மேலும், 5 ஆயிரத்து 836பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 99 ஆயிரத்து 860பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுதவிர, இரண்டு ஆயிரத்து 225பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.




