Reading Time: < 1 minute
Tamil Business Directory
கொலை குற்றச்சாட்டு தொடர்பாக பெண் ஒருவரை, தீவிரமாக தேடி வருவதாக வின்னிபெக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஜோன் பியூஸ்னலின் கொலை தொடர்பாக, ஏற்கனவே கடந்த வியாழக்கிழமை 24 வயதுடைய டெய்லர் லாபியர் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், இக் கொலை சம்பவத்துடன் தொடர்படைய 31 வயதான ஷைலா லீ என்பவரையும் கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
64 வயதான ஜோன் பியூஸ்னல் என்பவர், டவுன்டவுனுக்கு வடக்கே இசபெல் மற்றும் எலன் வீதிகளுக்கு இடையில் எல்ஜின் அவென்யூவில் குடியிருப்பு பகுதியில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
இந்த நகரில் நடப்பு ஆண்டில் பதிவான 28ஆவது மரணமாக இது பதிவானது.
இந்த சம்பவம் தொடர்பிலேயே பொலிஸார் தற்போது குறித்த பெண்னை தேடி வருகின்றனர். அத்தோடு குறித்த பெண் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் தம்மை தொடர்புக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர்.




