Reading Time: < 1 minute
Tamil Business Directory
உலகில் மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு, கனடாவில் ஒரேநாளில் 173பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன்மூலம் கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, 2147ஆக உயர்ந்துள்ளது.
இதுதவிர, நேற்று (வியாழக்கிழமை) மட்டும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 1920பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனடிப்படையில் கனடாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 42,110ஆக உயர்வடைந்துள்ளது.
இதுவரை 14761பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதோடு, 557பேரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளது. மேலும். 25202பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.




